17078 அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி.

எஸ்.ரகுராம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2015. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

viii, 496 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-035-2.

இந்நூல் தொடர்பாடல், அபிவிருத்தியும் அபிவிருத்தி தொடர்பாடலும், நாட்டார் ஊடகங்கள், தொடர்பாடல் நோக்கில் நாட்டார் நிகழ்த்து கலைகள்: தகுதிகளும் தடைகளும், அபிவிருத்தித் தொடர்பாடலில் நாட்டார் ஊடகங்களை பயன்படுத்துதல் ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் விரிவான தமிழ் ஆங்கில துணைநுற்பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. சிவசுப்பிரமணியம் ரகுராம் கிழக்குப் பல்கலைக்கழக திருக்கோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கைகளில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிபவர். இத்துறையில் கற்கும் மாணவர்களின் நலன் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இதன் மூலம் அபிவிருத்தி ஊடகம், அபிவிவிருத்தித் தொடர்பாடல் குறித்த மாற்றுச் சிந்தனைக்கான மாற்று அணுகுமுறைக்கான முன்னாய்வுகளை உருவாக்க வேண்டுமென்ற ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.  (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 75130).

ஏனைய பதிவுகள்