17080 யாழ்ப்பாணப் பத்திரிகைகள்.

தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-955-0958-29-0.

உதயதாரகை முதல் காலைக்கதிர் வரை, யாழ்ப்பாணத்தின் முதற் பத்திரிகை, யாழ்ப்பாணத்தின் முதற் செய்திப் பத்திரிகைகள், யாழ்ப்பாணச் செய்திப் பாரம்பரியத்தின் தொடக்கம், யாழ்ப்பாணத்தின் முதற் சிறுவர் பத்திரிகை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏனைய பத்திரிகைகள், 1901-1930 கால யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள், மேலதிக வாசிப்பிற்கான நூல்கள், என்னுரை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தில்லைநாதன் கோபிநாத் ஆவணமாக்கச் செயற்பாட்டாளர், வரலாற்று ஆய்வாளர். புங்குடுதீவைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். ஈழத்து ஆவணமாக்கற் செயற்பாடுகளில் 2004 முதல் ஈடுபட்டு வருகின்றார். நூலக நிறுவனத்தின் தொடக்கம் முதல் பங்களித்து வரும் இவர், வாழ்க்கை வரலாற்றுக் கலைக்களஞ்சியம், யாழ்ப்பாணப் பத்திரிகைகளை ஆவணப்படுத்தல், ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்தல், வாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் போன்ற செயற்றிட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார்.

மேலும் பார்க்க:

இலங்கை இதழியலில் சிவகுருநாதன். 17875

ஏனைய பதிவுகள்