எஸ்.எல்.எம்.ஹனீபா. மட்டக்களப்பு: கஸல் பதிப்பகம், 219, ஏ.கே.எம்.வீதி, ஏறாவூர், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
140 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5816-14-9.
எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களால் அவ்வப்போது எங்கள் தேசம், எழுச்சிக் குரல், சரிநிகர் போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியரின் முகநூல் பக்கங்களிலும் எழுதப்பட்ட பத்திகளின் தொகுப்பு. ஒன் யுவர் மார்க் கெட் செட் கோ, அருணாசலம் தம்பிப்பிள்ளை அவர்கள், நானும் எழுத்தும், வாப்பாவின் பூனை, கால்நடைக்கோ காட்சிகள், ராணி, இளவரசி, இஸ்தான்புல்லில் ஒரு மகன், நானும் எனதினிய தேவராஜூம் முப்பது பவுண் நகைகளும், ‘மருத்துவம்’ கதை பிறந்தது, நானும் பாலாவும், ஆதம் மாமாவும் பலாமரத்தடியும், காணாமல் போன பலாப்பழம், கறவைப் பசுக்களும் கன்றுகளும், இனப்பிரச்சினையும் மூறா எருமைகளும், இனப்பிரச்சினையும் இறைச்சிக் கோழிக்குஞ்சுகளும், புத்தனே வருக, சு.ரா., எத்தளம் சென்றாலும் புத்தளம் செல்லாதே, மகானும் மூன்று சிங்கங்களும், சூறாவளிக் கதை, துறைக்காரருடைய மகன், இன்று வந்தான் ஒரு மனிதன், டாக்டர் குகதாசன் ஐயா, அஷ்ரஃபைக் கண்டேன், மூணாம் நம்பர், மர்ஹூம் அல்ஹாஜ் டாக்டர் பதியுதீன் மஹ்மூத், செவ்வந்தி நீ எங்கே, அவர்கள் வந்தார்கள், தீரா நினைவுகள், கறுப்பியன் குளமே சௌக்கியமா?, பறைமேளக் கூத்து, நொச்சிமுனையாரும் காஞ்சிரங் கொட்டையும், கறி மணக்கும், சீமாட்டி, பிஞ்சு பலாக்கறி, பனையான் மீன் பாலாணம், உப்புக் கண்டம், இறால் வேட்டை, காணாமல் போன கண்டல்காடு, பாலை, வில்வம் (வில்வெத்திரி), சல்லிமரம், என் இனிய மாமரமே, காட்டு மா, சாறணை, மண்டூர் பெனி வர்க்கா, காதல் சுதந்திரம், எங்கள் முதுசொம்-அதிபர் பிரின்ஸ் காசிநாதர், சுலக்சன, பொன் விழாக் காணும் எனது சைக்கிள் வண்டி ஆகிய தலைப்புகளில் இப்பத்திகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117537).