17083 கலாநிதி. எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகள்.

எம்.ஏ.எம்.சுக்ரி (மூலம்), நௌபாஸ் ஜலால்தீன் (தொகுப்பாசிரியர்). பேருவளை: நளிமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், அபிவிருத்தி,ஆய்வு மற்றும் பயிற்றுவிப்புக்கான நிறுவனம், Academy for Development, Research and Training (ADRT), P.O.Box 01,1வது பதிப்பு, டிசம்பர் 2020. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).

vi, 233 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14சமீ.

நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தின் முத்திங்கள் ஆய்வு சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’ யில் வெளிவந்த 93 ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பே இந்நூலாகும். இஸ்லாமிய சிந்தனை: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இஸ்லாமிய சட்டங்கள் தெய்வீக சித்தத்தின் அடிப்படையில் அமைந்தவை, ஜாமிஆ நளீமிய்யாவின் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு, இளைஞர்களே ஒரு சமூகத்தின் உயிரோட்டமுள்ள வளமாகும், கலைச்சொல் பிரயோகங்களில் போதிய தெளிவு வேண்டும், முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் இஸ்லாத்திற்கே உண்டு என இன்னோரன்ன தலைப்புகளில் ஆசிரியர் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71437).

ஏனைய பதிவுகள்