ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-0958-54-2.
ஈழத்துத் தமிழரும் கீழைத்தேய கலைமரபுக்கான தனியடையாளங்களை ஏற்படுத்தியவருமான கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் கட்டுரை சுதேசிய சிறந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. கலாயோகி, இந்திய கலை மரபுக்கு உரிய பெறுமானத்தை எவ்வாறு ஏற்படுத்தியுள்ளார் என்பதை மெய்யியல் தளத்தில் அணுக இக்கட்டுரை முற்பட்டுள்ளது. மெய்யியலுக்கேயான மொழிமுறைமை, தர்க்கவியல் மயப்பட்ட கட்டமைப்பு, எளிமையான வெளிப்பாட்டு முறைமை என்பன ஈழக்கவியின் தனித்த அடையாளங்களாகும். இது கீழைத்தேய மெய்யியல் துறைசார்ந்த ஒருவரின் பார்வையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 330ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72299).