ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-02-7.
இலங்கையின் முக்கியமான மெய்யியல் அறிஞர்களுள் ஒருவரும் கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் எம்.எஸ்.எம். அனசின் சமீபத்திய நூலான ‘மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்’ பற்றிய ஓர் அறிமுக மதிப்பீடாக ஈழக்கவியின் இந்நூல் வெளிவந்துள்ளது. ஈழக்கவி ஏ.எச்.எம்.நவாஸ் எழுதி ஜீவநதியில் பிரசுரமான நீண்ட நூலாய்வுக் கட்டுரை இது. நவாஸ் நூலின் ஒவ்வொரு அத்தியாயமாக அவற்றின் முக்கிய கருத்துகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக விளக்கியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 374ஆவது நூலாக வெளிவந்துள்ளது.