செல்வத்துரை குருபாதம். கனடா: திருமதி ஜெயஜோதி குருபாதம், Bonspiel Drive, Toronto, M1E 5K4, Ontario, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 107 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-94868-1-2.
அமரர் செல்வத்துரை குருபாதம் அவர்களின் 20உளவியல் ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒரு மதம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வழிகாட்ட முடியும் என்று உதாரணங்களுடன் விளக்கப்படுத்தியுள்ளார். நீ யார், கடவுள் ஒரு அணுகுமுறை, கடவுள் அது ஒரு மனநிலை, சொர்க்கமும் நரகமும் உனக்குள்ளே, முறைகேடாய் இருப்பதை விட இயல்பாய் இருப்பது மேல், கடவுளின் தோற்றம், பின்பற்றுவது மதமல்ல-பயத்தையே, ஓர் புதிய காலைப் பொழுது எங்களுக்குள் உதயமாகும், உன்னை விட்டு ஓடாதே, ஆளுமை, உங்களைப் பார்த்து நீங்களே பிரம்மியுங்கள், தூய்மையாய் இரு ஒன்றையும் பெறமாட்டாய், வார்த்தைகளால் ஏமாற்ற முடியும் மௌனத்தால் ஏமாற்ற முடியாது, மனிதனிடம் நடுக்கமின்றி வேறெதுவும் இல்லை, எண்ணங்களின் போக்கைக் கவனி, இருப்பது எதுவோ அதுவே உண்மை, வாழ்வு, வாழ ஆசை-இறக்க ஆசை, ஒரு கை ஓசை, மனிதனாகி விடுங்கள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில், அமரர் குருபாதம் அவர்கள் எழுதிய போதி தர்மர் புத்தகத்திலிருந்து சில பகுதிகளும், நூல்விபரப்பட்டியலும், நூலாசிரியர் பெற்ற விருதுகளின் விபரங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72498).