17089 அல்பிறெட் ஆட்லரின் ஆளுமைக் கொள்கை (ஆளுமைக் கொள்கைகள்-3).

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

20 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955-0958-63-4.

அல்பிறெட் ஆட்லர் உள இயங்கியல் கொள்கையாளர் வரிசையில் இடம்பெற்றாலும் அதிலிருந்து திரிந்து தனிநபர் உளவியல் என்னும் தனித்துவமான கொள்கையை உருவாக்கியவர். அல்பிறெட் ஆட்லரின் கருத்துக்கள் உளவியல்துறையில் பெரிதும் உள்வாங்கப்பட்டுள்ளன. அல்பிறெட் ஆட்லரின் கொள்கையின் மைய விடயம் சுயநிறைவாக்க முயற்சியாகும். ஏனைய முக்கிய விடயங்களாகத் திகழ்பவை தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், பிறப்பு நிலை ஒழுங்கு, வாழ்வுப் பாணி, சமூகநல ஆர்வம் என்பனவாகும். இந்நூலில் இக்கொள்கைகள் சுயநிறைவாக்க முயற்சி, கற்பனா இறுதி நிலையியல், தாழ்வுணர்ச்சி, தாழ்வுச் சிக்கல், உயர்வுச் சிக்கல், தனித்துவமான வாழ்வுப்பாணி, ஆளுதல், பெற்றுக்கொள்ளல், விலக்கல், சமூகப் பயன்பாடு கொண்டிருத்தல், சமூகநல ஆர்வம், அகத்தின் ஆக்கசக்தி, பிறப்பு ஒழுங்கு, ஆளுமை உருவாக்கத்தில் பிள்ளை வளர்ப்பு முறை, சிறுவர் பருவ நினைவுகள் ஆகிய குறுந்தலைப்புகளின்கீழ் விளக்கப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 343ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்