17090 ஆபிரஹாம் ஹறொல்ட் மாஸ்லோவின் தேவை அடுக்குக் கொள்கை மற்றும் கார்ள் றோஜேர்சின் ஆளுமைக் கொள்கை (ஆளுமைக் கொள்கைகள்-5).

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

40 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955-0958-64-1.

ஆபிரஹாம் ஹறோல்ட் மாஸ்லோவின் (Abraham Harold Maslow 1908-1970) தேவை அடுக்குக் கொள்கை (Theory of Hierarchy of Needs) பற்றி இந்நூலின் முதற் கட்டுரையில் பேசப்படுகின்றது. இதுஅறிமுகம், பற்றாக்குறைத் தேவைகள், இருப்பியல் தேவைகள், உடலியல் தேவைகள், பாதுகாப்புத் தேவை, உறவுத் தேவையும் அன்புத் தேவையும், கணிப்புத் தேவை, அறிவுத் தேவை, அழகியல் தேவை, சுயமேம்பாடடைதல், சுயம் கடத்தல் அல்லது தற்கடப்பு, முடிவுக்கருத்து ஆகிய  பிரிவுகளின் கீழ் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவதாக, கார்ள் றோஜேர்சின் ஆளுமைக் கொள்கை (Personality Theory of Carl Rogers) என்ற  கட்டுரை இடம்பெற்றுள்ளது. இது மனிதாய உளவியல் அறிமுகம், கார்ள் றோஜேர்சின் அகக் கொள்கை, அகத்தின் அம்சங்கள், சுய எண்ணக்கரு, சுய எண்ணக்கருவின் செலவாக்கு, சுய எண்ணக்கரு  உருவாக்கம், சுய எண்ணக்கரு ஒத்திசைவும் ஒத்திசைவின்மையும், ஒத்திசைவு மற்றும் ஒத்திசைவின்மையில் குழந்தைப்பருவ அனுபவங்களின் செல்வாக்கு, ஒத்திசைவின் விளைவுகள், ஒத்திசைவின்மையின் விளைவுகள், மனிதப் பிரச்சினைகளுக்கான காரணிகள், மனிதர் பற்றிய கண்ணோட்டம், சுயமேம்பாடடைதல், சுயமேம்பாடடைதலில் பிறர் ஏற்பு அன்பு அங்கீகாரம், முழுமையாக இயங்கும் மனிதர், அருள் தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் உளவியல் பாட வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். அத்தோடு கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருமடம், யோசப் வாஸ் தமிழ் இறையியல் கல்லூரி என்பவற்றில் உளவியல் விரிவுரையாளராகச் சேவையாற்றுகின்றார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 345ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Snabblån

Content Casino Tillsammans Hastig Utbetalning 2018 Online Casinon Med Rapp Uttag Kom Verksam Och Prova Gällande Det Ultimata Online Casinot Tillsammans Assistans A Ditt Bankid