இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
24 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×13சமீ., ISBN: 978-955-0958-65-8.
அருள் தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் உளவியல் பாட வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றுபவர். அத்தோடு கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருமடம், யோசப் வாஸ் தமிழ் இறையியல் கல்லூரி என்பவற்றில் உளவியல் விரிவுரையாளராகச் சேவையாற்றுகின்றார். இந்நூலில் எறிக் எறிக்சனின் (Erik Erikson) உள-சமூகவியல் கொள்கைகளை மெய்யியல்துறை மாணவர்களின் பயன்பாட்டிற்கேற்ப விளக்கியுள்ளார். நம்புதல் எதிர்-சந்தேகம் அல்லது நம்புதற் கடினம், சுயாதீனம் எதிர் -வெட்கம்: சுய ஆற்றல் சந்தேகம், முன்னெடுப்பு எதிர்-குற்ற உணர்வு, முயற்சி எதிர்-தாழ்வு மனப்பாங்கு, அடையாளம் காணுதல் எதிர்-வகிபங்குக் குழப்பம், அன்பு நெருக்கம் எதிர்-தனிமைப்படுதல், ஆக்கல் நிலை எதிர்-தேக்க நிலை (தன்னுள் மூழ்குதல்), ஆளுமை ஒருங்கிணைவு எதிர் அவநம்பிக்கை ஆகிய எட்டு இயல்களில் இந்நூலை எழுதியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 344ஆவது நூலாக வெளிவந்துள்ளது.