சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2020. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
vi, 114 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-159-5. கலைகளுக்கும் உளவியலுக்கும் சீர்மியச் செயற்பாடுகளுக்குமுள்ள தொடர்புகள் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வரகின்றன. இத்துறையில் வளமான கருத்து வினைப்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய தளமாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உளப்பகுப்பு உளவியல், மானிட உளவியல், அறிகை உளவியல், மார்க்சிய உளவியல், முதலாம் துறைகளில் உள்ள நூல்களும், கலைக்கொட்பாட்டு நூல்களும் இந்த ஆக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. உளவியலில் மனக்கட்டுகை என்ற கருத்து வடிவம், தொன்மங்களும் மனச்சுகமும், எழுதுதல் வழியான உளச்சுகம், எழுத்தழகுக் கலையும் உளவியலும், வாசிப்பு ஒரு சிகிச்சை முறை, புனைவு பேச்சுச் சுகம், கிராமத்து நகைச்சுவை, நகையத்தின் உளவியல் ஆற்றல், ஆடலின் உளவியல் உள்ளீடு, இசையின் உளவியற் சுகம், கடதாசிக் கலையும் மனச்சுகமும், உளச்சிகிச்சை முறையாக இணக்கல் அரங்கு, விளையாட்டுச் சிகிச்சை, பொம்மலாட்டமும் மன அழுத்த விடுவிப்பும், சினிமாவை உளச் சிகிச்சையாகப் பயன்படுத்துதல், தமிழ்ச் சூழலில் தொலைக்காட்சித் தொடரிகள், கட்டடக் கலையும் ஒடுக்குமறையும், சோதிடமும் உளவியலும், தமிழ்ச் சூழலும் பண்பாட்டுக் கைத்தொழிலும் ஆகிய 19 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் மேலட்டையில் ‘கலையும் உளவியல் வெளியும்’ என அச்சிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71453).