கணபதி சர்வானந்தா. யாழ்ப்பாணம்: அறிவன் வெளியீட்டகம், காங்கேசன்துறை வீதி, இணுவில் மேற்கு, இணுவில், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 14.5×10.5 சமீ., ISBN: 978-624-93930-4-2.
உங்களுக்காக மட்டுமன்றி அடுத்தவருக்காகவும் வாழும்போதுதான் வாழ்வின் நிஜம் உண்மையில் அர்த்தங் கொள்கின்றது என்பதை இந்நூல் சுருக்கமாகவும் தெளிவாகவும் மனதில் பதியவைக்கின்றது. சமூக அக்கறையுடன்கூடிய திறமையிருந்தும் படைப்பாக்கத்திறன் மிகுந்தும், அவற்றை உலகுக்கு அறிவிக்க முனையாத ஆளுமையுடையோர் குடத்திலிட்ட விளக்குகளாகவே குறுகிய வரையறைகளுக்குள் வாழ்ந்து கழித்து மங்கிப் போய்விடுவதை விடுத்து, சந்தர்ப்பங்கள் கிட்டும் போதெல்லாம் தம்மை பொது வெளியில் வெளிப்படுத்த (Self Marketing) முன்வரவேண்டும் என்று கூறுகின்றார்.