ஆ.ஜென்சன் றொனால்ட். கொடிகாமம்: கயல்விழி அறிவொளி முன்பள்ளி, கயல்விழி ஒழுங்கை, அறிவொளி வீதி, மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, மே 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
52 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98956-2-1.
நேர்வயமான சிந்தனை, நல்ல விடயங்களில் கவனம் செலுத்துதல், நன்றி உணர்வை வெளிப்படுத்தல், நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தல், நேர்வய சிந்தனை உடையவர்களுடன் நேரத்தைச் செலவளித்தல், நேர்வயமாக எமக்குள்ளேயே பேசிக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்துதல், நேர்வயமான குறிப்புகளுடன் நாட்களை ஆரம்பித்தல், உங்களுடைய நடத்தைக்கு நீங்களே பொறுப்பாயிருத்தல், சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பை வழங்குதல், நேர்வய சிந்தனைகளுக்கு தீனி போடுபவற்றை அடிக்கடி வாசித்தல், எம்மிலுள்ள மறைவயமான சிந்தனைகளை இனங்கண்டு அவற்றை மாற்ற முயலவேண்டும், இலக்கை நோக்கி வேலை செய்தல், மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தல், மனநிறைவையும் சுய விழிப்புணர்வையும் வளர்த்தல், விமர்சனங்களை முகாமை செய்யப் பழகிக்கொள்ளுதல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடுதல், சிறந்த ஆளிடைத் தொடர்பாடலை மேற்கொள்ளல், சவால்களைச் சாதுரியமாக எதிர்கொள்ளல், ஊக்கப்படுத்துதல், வாழ்க்கைத்திறன் மேம்பாடு, மற்றவர்கள் முன் நாம் விரும்பத்தக்கவர்களாக இருத்தல், நன்மைகளை அனுபவித்தல், ஆளுமை, தலைமைத்துவம் ஆகிய 24 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.