17099 வெற்றியின் விலாசங்கள்.

கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, 2023. (மன்னார்: சைபர் சிட்டி பிரின்ட்).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-41027-7-4.

ஆசிரியரின் ஒன்பதாவது நூல் இது. கமலினியின் இந்நூல் வாழ்வியல் வேரின் பரிமாணங்களை விளக்கி நிற்கின்றன. மண், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய பஞ்சபூதங்களின் வழியாக ஒரு அற்புத அகத்திறவுகோலை தன் எழுத்தின் வழியாக ஆசிரியர் நிகழ்த்தியுள்ளார். ஐம்பூதங்களுடனான மனிதனின் தொடர்புகளை இதிலுள்ள ஆக்கங்களின் வழியாக ஒப்பிட்டு எழுதியுள்ளார். வெற்றிப்படி, எம்மால் முடியும், கோபம் தவிர்ப்போம், பயமும் தயக்கமும், தாழ்வு மனப்பான்மை, தற்கொலையும் மனச்சோர்வும், ஒழுக்கம் ஆகிய ஏழு தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 

ஏனைய பதிவுகள்