டேவிட் வின்சென்ட் பற்றிக். யாழ்ப்பாணம்: மாற்றம் வெளியீடு, மகிழ்வக வளாகம், மருதங்கேணி, 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).
(2), 102 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-3463-11-1.
உள-ஆன்மீக வழிகாட்டுதலை முதன்மைப்படுத்தி, மனித வாழ்வு மேம்படத் தூண்டுவிக்கும் நூலாக இந்நூல் அமைகின்றது. அருட்தந்தை பேராசிரியர் ஹென்றி ஜே.எம்.நொவென் அவர்களின் ’The Inner Voice of Love’ என்ற நூலின் தமிழாக்கமான இந்நூல் மனித வாழ்வை நேசிப்போருக்கு விருந்தாகவும், மனக்காயப் படுத்தப்பட்டோருக்கு மருந்தாகவும் அமைகின்றது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை பேராசிரியர் ஹென்றி ஜே.எம்.நொவென் ஒரு இறையியல் கோட்பாட்டாளர். 1987-88 காலப் பகுதியில் தீவிர மன அழுத்த நோய்க்காக கனடா-ரொறன்டோவில் உள்ள ‘எல் அரிச்சியில்’ சிகிச்சை பெற்று வந்தார். அந்நோயிலிருந்து மீண்டுவர தான் மேற்கொண்ட வழிமுறைகளையும் மனத்தின் கடுந்துயர் சிறையிலிருந்து விடுதலையாதலைப் பற்றியும் 1996ஆம் ஆண்டு வெளியான தனது ’The Inner Voice of Love’ என்ற நூலில் விவரித்துள்ளார்.