கந்தர்மடம் அ.அஜந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
60 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-41-6.
‘நாளாந்த வாழ்வின் தூசுகளை எமது ஆத்மாவை விட்டுக் கழுவி எடுத்துவிடுவது ஓவியம்’ என்பார் உலகப் புகழ் பெற்ற ஓவியர் பாப்லொ பிக்காஸோ. ‘அந்தக் கலையில் நீங்கள் சிறந்தவர் என்பதல்ல இங்கு முக்கியம். அந்தக் கலை உங்களுக்குச் சிறந்தது என்பதே உண்மை’ என்ற ஒரு முதுமொழியும் எம்மிடையே வழக்கில் உண்டு. ஈழத்தமிழர் மத்தியில் கலைகளில் ஓவியக் கலை பற்றி தமிழில் எழுதப்படுவது குறைவு. மனித ஆன்மாவின் அதி உச்ச வெளிப்பாடு எனப்படும் ஓவியங்கள், அவற்றின் நலமாக்கும் பண்பு ஆகியவற்றைக் கொண்ட முதற் கட்டுரையோடு, இன்னும் சில உளநலக் கட்டுரைகளையும் உள்ளடக்கி வந்துள்ள நூல் இது. நினைவுச் சின்னம் ஒரு வரலாற்றுத் தொடுகல், புகழ்பெற்ற ஓவியங்களின் உளவியல் பின்னணி, மனிதனின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள், உடல்மொழி, மெய்ப்படும் கனவுகள், தொடர்பாடல் திறன் வளர்க்கப்படவேண்டிய கலை, பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் கலை, மீண்டெழுதல், சுயமறிந்தால் சுகமாகும் வாழ்வு, நலமான வாழ்வு நம்கையில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 10 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 414ஆவது நூலாக வெளிவந்துள்ளது.