17102 விஞ்ஞான முறை.

R.D. குணரத்ன (சிங்கள மூலம்), மு.ரவி (தமிழாக்கம்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (மட்டக்களப்பு: Michael’s Mobile Printers, இல. 90, பார் வீதி). 

(6), 298 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52827-0-3.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யல்துறைப் பேராசிரியரான R.D. குணரத்ன சிங்கள மொழியில் எழுதிய விஞ்ஞான முறை என்ற நூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை விரிவுரையாளரான மு.ரவி தமிழாக்கம் செய்துள்ளார். இலங்கையின் உயர் கல்வித் துறையில் ‘அளவையியலும் விஞ்ஞான முறையும்’ என்ற பாடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தமிழில் இப்பாடத்திற்குரிய நூல்கள் போதியளவில் வெளிவந்திருக்காத நிலையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும்-தோற்றமும் வளர்ச்சியும், முறையியலாளர்களின் செயற்பாடுகளும் விஞ்ஞான முறையியலின் அடிப்படை பண்புகளும், விஞ்ஞானத்தின் பல்வேறு முறைமைகள், சோதனை, அளவீடு, நிகழ்தகவு, புள்ளியியல், தொகுத்தறிதலுக்காக பயன்படுத்தப்படுகின்ற இடைநிலை முறைகளும் கோட்பாடுகளும், விஞ்ஞான  பொதுமையாக்கத்தின் பண்புகள், சமூக விஞ்ஞானங்களின் முறையியல், விஞ்ஞான முறை பற்றிய சார்புவாதக் கருத்து ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 121245).

ஏனைய பதிவுகள்