வள்ளுவதாசன். மாங்குளம்: புலவர் வள்ளுவதாசன், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).
91 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.
திருக்குறள், நாலடியார் ஒப்பீடும் விளக்கமும். அறம் சார்ந்த திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களிலுமுள்ள வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய மிக முக்கியமான பாக்களைத் தொகுத்து, மீண்டும் எமது வாழ்க்கை நெறிமுறைகளை வளரும் சந்ததியினருக்கு ஞாபகம் ஊட்டும் வகையில் இந்நூலை புலவர் வள்ளுவதாசன் உருவாக்கியுள்ளார். கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கான பாடத்திட்டத்திற்கு அமைவான ‘பேதமை’, மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைக்கான அறிவுடைமை, குற்றங் கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலி அறிதல், காலம் அறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் ஆகிய பாடங்களையும், பாடத்திட்டம் சாராத பிரிவுகளான கல்வி, வெகுளாமை, கயமை, இரவச்சம், நல்குரவு, கூடாநட்பு, சுற்றம் தழால், கேள்வி, ஒப்புரவறிதல், ஈகை, நட்பாராய்தல், வினைத்திட்பம், நாடு, படைச்செருக்கு, வாய்மை, உட்பகை, பெரியாரைப் பிழையாமை, கல்லாமை ஆகிய பிரிவுகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது.
மேலும் பார்க்க:
ஆத்திசூடிக் கதைகள். 17444