கி.லக்ஷ்மணன். சென்னை 600 014: பழனியப்பா பிரதர்ஸ், 5ஆவது பதிப்பு, 1997, 1வது பதிப்பு, மே 1960, 4ஆவது பதிப்பு, 1987. (சென்னை 600 014: ஏஷியன் அச்சகம்).
xvi, 437 பக்கம், விலை: இந்திய ரூபா 49.90, அளவு: 18.5×12.5 சமீ.
தத்துவஞானப் பிரிவுகள் பலவற்றின் அடிப்படைகளை நுட்பமாக ஆராய்ந்து, மிகத்திறம்பட ஒழுங்குபடுத்தித் தரும் ஒரு கருவூலமாக இந்நூல் அமைந்துள்ளது. ஐந்து பகுதிகளாக விரியும் இந்நூலின் முதலாம் பகுதியில் வேத உபநிடதங்கள் (வேதங்கள், உபநிடதங்கள், கீதை), இரண்டாம் பகுதியில் அவைதிக தத்தவங்கள் (உலகாயதம், சமணம், பௌத்தம்), மூன்றாம் பகுதியில் ஐவகை தரிசனம் (சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை), நான்காவது பகுதியில் (வேதாந்தம், இராமானுச வேதாந்தம், மத்துவ வேதாந்தம்), ஐந்தாவது பகுதியில் சைவசித்தாந்தம் என்றவாறாக பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.