திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: தி.தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).
xii, 200 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-98964-0-6.
இந்நூலில், மனையடி சாஸ்திரத்தின் தோற்றம், வீடு கட்டும் பூமியைத் தேர்ந்தெடுத்தல், மனையடி சாஸ்திரத்திற்குரிய சோதிட விதிகள், வீடு கட்டுவதற்கு உகந்த நிலம், மனைக்கு யோகம் தரும் தாவரங்கள், சிறப்பான வீடு அமைய சோதிட ரீதியான பலன்கள், மின்சாரமும் வீட்டின் அமைப்பும், வீட்டின் நீள அகல பலன்கள், சுவாமியறை, சமையலறை, கழிப்பறையும் குளியலறையும், வீட்டுக்குரிய தெருக்குத்தல், மேல்வீடுகளும் மாடிப்படிகளும், வீட்டுக்குரிய வர்ணம், கிணறு அமைத்தல், வீடு கட்டப் பயன்படுத்தப்படும் மரத்தின் தன்மை, வீடுகளுக்குரிய நிலை, கதவு, அமைக்கும் விதிமுறைகள், வீட்டுக்குரிய ஜன்னல் அமைப்பு, வீட்டின் சுவர், வீட்டின் கூரை அமைப்பு, வீட்டுக்குரிய வாசல் அமைப்பு, மனைகளில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் தீய பலன்கள், நோய்கள் உருவாவதற்கு காரணமான வீட்டுக் குறைபாடுகள், வாஸ்து பூஜை, மனைக்குரிய தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள், வீட்டின் குறைபோக்கும் பரிகாரங்களும் அதற்கான காரணங்களும், தேங்காய் குறிபார்த்தல், சிறந்த வீட்டினால் உருவாகும் பதினாறு பேறுகள், வீட்டுக்குப் பெயர் வைத்தல், வீட்டுக்கு வரும் பிராணிகளால் உருவாகும் பலன்கள், வீட்டை விரிவுபடுத்தல், வீட்டுக்கு வெளிப்புற வாசலில் உள்ள சிலைகள், படங்களின் பலன்கள், மனையை வாழ்த்துதல், வீடு பற்றிய பழமொழிகள், கட்டிட அனுமதி பெறுவதற்கு அரசாங்க காரியாலயத்தில் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள், நகர அபிலிருத்தி கட்டளைச் சட்டமும் வீடமைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளும், நமது தேசத்தில் மேலைத்தேச கலாசார அமைப்பில் வீடுகளின் நிர்மாணம், பின்னிணைப்பு ஆகிய 38 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.