தமிழ்நேசன். மன்னார்: மன்னா வெளியீடு, கலையருவி, மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம், புனித சூசையப்பர் வீதி, இல. 16/3, பெற்றா, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (மன்னார்: எபிநேசர் அச்சகம்).
iv, 30 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.
‘கரைகாணாக் கடவுளின் அன்பை இயேசு தன் பாடுகளாலும் மரணத்தாலும் நமக்கு எடுத்துக்காட்டினார். இறப்பதற்காக வாழாமல், அவர் வாழ்வதற்காக இறந்தார். இயேசுவின் சிலுவைப் பயணமானது என்றோ எங்கோ நடந்துமுடிந்த ஒரு பழங்கால வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல. மாறாக அது இன்றும் நமது மத்தியில், நமது நகரங்களில், நமது கிராமங்களில், நமது தெருக்களில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ஒரு யதார்த்த நிகழ்வாகும். இயேசுவின் பாடுகளைச் சிந்திப்பது நமக்கு ஓர் ஆன்மீக அனுபவமாக அமையவேண்டும். அவருடைய பாடுகளை நினைத்து கண்ணீர் வடிப்பதும், ஒப்பாரி வைப்பதும் இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல. அவர் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. அவரது வாழ்வியல் சிந்தனைகளை நமது வாழ்வோடு இணைக்கவேண்டும். தனது மரணவாயிலில் கூட அவர் மதித்துப் போற்றிய உயர்ந்த மதிப்பீடுகளை நாம் மனதில் பதியவைக்க வேண்டும் என்று அவர் எதிரபார்க்கிறார். நாம் வாழும் இன்றைய சூழ்நிலைகள் கல்வாரிக் குன்றுகள். நாம் சந்திக்கும் பிரச்சினைகள் இன்றைய நவீன சிலுவைகள். வாருங்கள் இயேசுவோடு கைகோர்த்துக்கொண்டு கல்வாரியில் நடப்போம். சிலுவையின் பாதையில் பயணிப்போம்’. (முன்னுரை). (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114774).