ஹிந்தகல ஞானாதார தேரர் (சிங்கள மூலம்), இரா.சடகோபன், மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு 3: பௌத்தாலோக்க நற்பணி மன்றம் (Bauddhaloka Foundation), இல. 491, 3 காலி வீதி, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
344 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 2000., அளவு: 21×15சமீ., ISBN: 978-624-5488-01-8.
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் வரலாற்று நிலை’ (புவியியல் பின்னணி, சமகாலத்து மத நிலைமைகள், தென் இந்தியாவினுள் புத்த மதத்தின் பிரவேசம் மற்றும் மஹிந்தவின் வருகை), ‘தென் இந்தியாவில் தேரவாத புத்த மதத்தின் பரவல்’ (அரசர்களின் அனுசரணை, பாமர மற்றும் பௌத்தர்களின் பங்களிப்பு), ‘பௌத்த நினைவுச் சின்னங்கள் மற்றும் கல்வெட்டுகள்’, ‘தமிழ் இலக்கியத்தில் பௌத்தத்தின் தாக்கம்’, ‘பாளி இலக்கியத்தை வளர்த்த தென்னிந்திய தேரவாத தமிழ் துறவிகள்’, ‘தென் இந்தியாவில் பௌத்ததேர அறிஞர்கள்’ (தமிழ்நாட்டில் பௌத்த தேர அறிஞர்கள், பாரதத்தில் புத்தமத வீழ்ச்சிக்கு வழிவகுத்த முக்கிய காரணிகள் சில) ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71421).