தியாக.சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: சிவஸ்ரீ தியாக. சோமாஸ்கந்தராஜக் குருக்கள், நெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம், நெல்லண்டை, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2003. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா மல்ரி ஓப்செட் பதிப்பகம், நெல்லியடி).
xvi, 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
சிவஸ்ரீ அமிர்தகடீசக் குருக்கள் (30.07.1973-26.06.2003) அவர்களின் மறைவையொட்டி அவரது நினைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை உரைகளுடன் அருள் நங்கையின் அணிந்துரையுடன், ஆத்மசாந்திப் பிரார்த்தனை (அ.சண்முகதாஸ்), விதியே விதியே (த.கலாமணி), படைக்கும் நிவேதனம், திருமுறை, திருமுறைப் பெருமை, ஆதிசைவ குருமார் பெருமை, அறுபத்து நான்கு கலைகள், அறுபத்து நான்கு திருவிளையாடல்கள், நூற்றெட்டு தாண்டவங்கள், திவ்விய வாழ்க்கை சரிதம், எள்ளும் தண்ணீரும், தோத்திரப் பாடல்கள், கண்ணீர் அஞ்சலிகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 112043).