யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-624-6601-20-1.
‘ஞானச்சுடர்’ சஞ்சிகையில் ‘இறப்பை எண்ணி’ என்ற தலைப்பில் 10 அத்தியாயங்களில் தொடராக எழுதப்பட்ட ஆன்மீகக் கட்டுரைகளின் நூல் வடிவம் இதுவாகும். நாம் பிறக்கும் போதே எமது வாழ்வில் இறப்பும் நிகழும் என்பதை அறிந்தே நாம் வாழ்ந்து வருகிறோம். வாழ்வில் நிகழும் என்று நாம் நினைத்த பலதும் நடவாமல் போவதுமுண்டு. ஆனால் இறப்பு மட்டும் நிச்சயமாக ஒரு நாள் நிகழும். இது யதார்த்தமாயினும் பொதுவாக அதனை எவரும் விரும்புவதில்லை. இந்த மெய் பொய்யானது என்ற ஞானம் பெற்ற அருளாளர்களும் மரணம் வேண்டாம் எனப் பாடியுள்ளதைக் கண்டு அவர்கள் ஆங்காங்கே மரணம் பற்றிப் பாடியவற்றைத் தொகுத்து இக்கட்டுரையில் ஆசிரியர் தந்திருக்கிறார். ஆக்க இலக்கியத்துறையில் சிறந்ததொரு படைப்பாளியான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். ஆன்மீகத் துறையில் அவரது ஆழமான அறிவினை இதிலுள்ள கட்டுரைகள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 403ஆவது நூலாக வெளிவந்துள்ளது.