யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-23-2.
ஆக்க இலக்கியத்துறையில் சிறந்ததொரு படைப்பாளியான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். ஆன்மீகத் துறையில் அவரது ஆழமான அறிவினை இதிலுள்ள கட்டுரைகள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அவ்வப்போது ஊடகங்களில் இவர் எழுதிவந்த ஆன்மீகக் கட்டுரைகளின் தேர்ந்த சிறு தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அடியார் வளையார் வருந்தார், இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க, நல்லவாறே நாவால் நவில, நற்பாற்படுத்த, ஓரூரும் நீ, பேசாத நாளெல்லாம், பிரார்த்தனை செய்வோம், எங்கும் எதிலும் இறைவன், வாக்கைக் காக்க, அன்னையெனக் கண்டோம், சகுனியும் தெய்வமாகி, வல்லமை தாராயோ? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 12 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆன்மீகத்தினூடாக மனித மனங்களை ஒருவழிப்படுத்த இக்கட்டுரைகள் எமக்கு வழிகாட்டுகின்றன. நம் ஆன்றோரின் பக்தி இலக்கியங்களை துறைபோகக் கற்றுப் பெற்ற அறிவு யோகேஸ்வரிக்கு இக்கட்டுரைகளை இலக்கிய நயத்துடன் உருவாக்கத் துணைநின்றுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 406ஆவது நூலாக வெளிவந்துள்ளது.