அம்பலவாணர் இராஜரட்ணம். கொழும்பு: சைவப்புலவர் சைவசித்தாந்த பண்டிதர் அம்பலவாணர் இராஜரட்ணம், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxiii, 472 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-94838-0-4.
பிரபஞ்சமும் உலகத் தோற்றமும் (மெய்ஞ்ஞான ரீதியில் பிரபஞ்சம், பஞ்சபூதங்களிலிருந்து உலகத் தோற்றம், விஞ்ஞானரீதியில் பிரபஞ்சம்), உயிர்களின் தோற்றங்கள் (மெய்ஞ்ஞான ரீதியில் உயிர்களின் தோற்றங்கள், பஞ்சபூதங்களினால் மானுட சரீரம் தோன்றிய விதம், விஞ்ஞான ரீதியில் உயிர்களின் தோற்றங்கள்), மானிடப் பிறப்பின் சிறப்பும் மானிட வாழ்வின் நோக்கமும், சைவமும் தமிழும் (தமிழ் மொழியின் சிறப்பு, சைவத்திற்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு), சைவசமயத்தின் மேன்மை (சமயம் என்றால் என்ன?, சைவ சமயத்தின் தொன்மை, சைவத்தின் மேன்மைக்கு சான்று பகரும் ஆன்றோர் வரலாறு), வாழும் வழிகள் (வாழ்வியல் சடங்குகள், வழிபாடு, யோகாசனங்கள், பஞ்சாங்கம், நட்சத்திரங்களின் தேவதை கணம் முதலிய ஓரைகள், அபரக் கிரியைகள், சிரார்த்தக் கிரியைகள், ஆசௌசம்- தீட்டு, துடக்கு, சில சம்பிரதாயங்களும் அதன் விளக்கங்களும், சில பயனுள்ள குறிப்புகள்), முப்பொருள் உணர்தல் (முப்பொருள்களின் தொடர்பு, அறிமுகம், பதி, பசு, பாசம்), முத்திப்பேறு அடையும் வழிகள் (சரியை, கிரியை, யோகம், ஞானம்), பேரின்பப் பெருவாழ்வு ஆகிய ஒன்பது பிரதான தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-நல்லூர் முத்திரைச் சந்தையடியைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் தான் சைவ சமயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் சைவசித்தாந்தப் பண்டிதர் பரீட்சையிலும் சைவப் புலவர் பரீட்சையிலும் சித்திபெற்று தன் சமய அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார். யாழ். சாதனா தமிழ் கலவன் பாடசாலையிலும், ஸ்டான்லி கல்லூரியிலும் பயின்றவர். கொழும்பு நகர காவலர் தலைமையகத்திலும், யாழ்ப்பாணம் வவுனியா நகர காவல் நிலையங்களிலும் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர். யா/ச.தொ.ச. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் பிரதம இலிகிதராகவும் பதில் பிராந்திய முகாமையாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.