யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-22-5.
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் தமது தொழில் அனுபவம், சமய உணர்வு, சமூகத்தின் தேவை இவை மூன்றையும் நன்குணர்ந்து உள்ளீர்த்து ‘வேண்டுதல்கள்’ என்ற தலைப்பில் இந்நூலை எழுதி வழங்கியுள்ளார். யோகேஸ்வரி வங்கித் துறையில் கடமைபுரிந்தவர். எழுத்துத் துறையிலும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருபவர். ஆக்க இலக்கியத் துறையில் சிறந்ததொரு கதைசொல்லியான இவர், மனித மனங்களின் வேண்டுதல்கள் தொடர்பாக தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரின் ‘ஞானச் சுடர்’ இதழ்களில் பல ஆன்மீகக் கட்டுரைகளைத் தொடராக எழுதிவந்துள்ளார். இந்நூலில் அக்கட்டுரைகளில் தேர்வுசெய்யப்பட்ட 20 உரைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 402ஆவது நூலாக வெளிவந்துள்ளது.