சண்முகலிங்கம் சஜீலன்;. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
24 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-955-0958-69-6.
யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாசாரப் பண்பாட்டின் இருப்பிடமாகவும் அதன் தலைநகராகவும் பண்டைய காலம் தொட்டே இருந்துவந்துள்ளது. இதற்கு இங்கு இப்பிரதேசம் எங்கும் விரவிக் காணப்படும் சைவ ஆலயங்கள் சான்று பகர்கின்றன. இச்சிறுநூலில் ஆசிரியர் தொன்மையான வரலாற்று இலக்கியங்கள் பேசும் ஆலயங்கள், மேலைத்தேயத்தவர்களின் யாழ்ப்பாணம் நோக்கிய வருகையும், கலை பண்பாட்டு இலக்கியங்களின் அழிவும், கல்வெட்டுக்கள், சாசனங்களைத் தன்னகத்தே கொண்ட ஆலயங்கள், கோவில்களைப் போற்றும் பிரபந்த இலக்கியங்கள், புராண படனமும் பிரசங்க மரபும் ஆகிய சிறுதலைப்புகளின் வழியாக இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட யாழ்ப்பாணத்துச் சைவாலயங்கள் பற்றிய சமூக வரலாற்றை விரிவாக விளக்கியுள்ளார். சண்முகலிங்கம் சஜீலன், தெல்லிப்பழையிலுள்ள பன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும், நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், நுவரெலியா தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியாவார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 346ஆவது நூலாக வெளிவந்துள்ளது.