17135 புண்ணியேஸ்வரம்: கீரிமலை (நாகமலை).

மகாராஜா ஸ்ரீராஜசேகரா (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அச்சகம்).

x, 59 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ.

பல்லவராசசேகரன், இராஜசேகரம் ஆகிய பெயர்களிலும் எழுதிவரும் திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் இலங்கை தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தவிசாளரும், ஆராய்ச்சியாளருமாவார். தமிழ்ப் பிரதேசத்தில் சித்தா சுகாதார சேவையை 1987இல் தாபித்து 1996வரை அதனை நடத்திவந்தார். சிங்கை மன்னர் பரம்பரையில் தோன்றிய இராசசிம்மனின் வழித்தோன்றலாகிய நூலாசிரியர், அரச மரபின்படி 1972இல் இளவரசர் ஆகவும், 2004இல் உ.இ.ம. மகாராஜா ஸ்ரீராஜசேகரா என்றும் நிலைப்படுத்தப்பெற்றவர். நகுலநவராஜ உமாபதீஸ்வரக் குருக்களின் வாழ்த்துச் செய்தியுடனும், சைவப் புலவர் வைத்தியர் வெற்றிவேல் சக்திவேல் அவர்களின் அணிந்துரையுடனும், உ.இ.ம.மகாராஜா ஸ்ரீராஜசேகராவின் முகவுரையுடனும் தொடங்கும் இந்நூல் புண்ணியேசுவரம், திருதாயுகம் சிங்கைப் பேரரசன் உக்கிரசிங்கன், சைவசமயம், கீரிமலைக் கோயில்கள், புண்ணியேசுவரம் சிவதரும மடங்கள், சிவபூமி ஈச்சரங்கள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

கவி ராஜவரோதயனின் கோணேசர் கல்வெட்டு. 17989

சிந்தையெல்லாம் நிறைந்தவரே. 17154

மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில். 17868

ஏனைய பதிவுகள்