17136 காத்தவராயர் மான்மியம் 2020.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ.

அல்வாய், வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் 2019இலிருந்து நடந்து வருகின்றது. அதையொட்டி முதலாவது இதழாக வெளிவரும் 2020ஆம் ஆண்டு வருடாந்த உற்சவகால ஆன்மீக ஆண்டிதழில் விநாயகர் வழிபாடு (க.பரணீதரன்), காத்தவராயர் வழிபாடு (த.கலாமணி), காத்தவராயரென்ற நாமம் பூண்டவனே- பாடல் (அல்வாயூர் சிவ. கணேசன்), மனித விழுமியங்களை மேம்படுத்தும் இறைபக்தி (மா.கருணாநிதி), காத்த வராயா எம்மைக் காத்திடு ராஜா- பாடல் (ஜெயபாரதி கௌசிகன்), இந்து சமய வழிபாடும் அறிவியல் உண்மைகளும் (விஜயநாதன் செந்தூரன்), வரமருளும் வரசித்தியான் – பாடல் (வெற்றி துஷ்யந்தன்), கருடபுராணம் கூறும் பாவங்களுக்கான நரகங்கள் (சுந்தரலிங்கம் நிருத்திகன்), வரசித்தி விநாயகா- பாடல் (புதுவை செ.யோ.வராகி), சிவசின்னங்களில் விபூதியின் மகத்துவம் (செல்லத்தம்பி சுரேந்திரா), காத்தவனே வருக- பாடல் (த.கலாமணி), ஆன்மீக நெறி (கீதாமணி கமலேந்திரம்), நல் அருளை அள்ளித்தரும் காத்தவராயன் (வரதவேல் மிதுர்ஷா), காத்தானை வணங்குவோம் -பாடல் (றுபேஷ் ஹரிஷ்னி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்