17137 காத்தவராயர் மான்மியம் 2021.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

20 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ.

அல்வாய், வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் 2019இலிருந்து நடந்து வருகின்றது. அதையொட்டி வெளிவரும் 2021ஆம் ஆண்டு வருடாந்த உற்சவகால ஆன்மீக ஆண்டிதழில் சைவ சமயிகள் வாழ்வும் தீட்சையும் (க.பரணீதரன்), அல்வாய் அருள்மிகு வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தான திருத்தல வரலாறு (த.கலாமணி), விநாயகர் உருவ தத்துவமும் தொழில்நுட்பமும் (விஜயநாதன் செந்தூரன்), கீதை காட்டும் மனித வாழ்வு (வெற்றி துஷ்யந்தன்), வணங்குதலும் அதன் முறைகளும் (வரதவேல் மிதுர்ஷா), விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள், நைவேத்தியம் என்றால் என்ன? ஆகிய கட்டுரைகளும், வரசித்தி விநாயகர் கீதம் (செ.சோ.வராகி), சீர்மேவும் பதி தன்னில் விழாக்காணும் புண்ணியனே (அல்வாயூர் சிவ கணேசன்) ஆகிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14555 ஜீவநதி ஐப்பசி 2011: கே.எஸ்.சிவகுமாரனின் பவளவிழாச் சிறப்பிதழ் 2011.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒப்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).