க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானம், கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
20 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ.
அல்வாய், வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் 2019இலிருந்து நடந்து வருகின்றது. அதையொட்டி வெளிவரும் 2022ஆம் ஆண்டு வருடாந்த உற்சவகால ஆன்மீக ஆண்டிதழில், விநாயகர் (க.பரணீதரன்), தீப வழிபாடு (வ.மிதுர்ஷா), பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள், விநாயகரின் 12 அவதாரங்கள், ஆயகலைகள் அறுபத்து நான்கு, தானம் செய்வதால் வரும் பலன்கள், பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீகக் குறிப்புகள் ஆகிய கட்டுரைகளும், ஆறு தலைமுறைகளின் சொத்தே (அல்வாயூர் சிவ.கணேசன்), காத்தவராயர் கருணையிலே (செ.சோ.வராகி) ஆகிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.