திருமலை சுந்தா (இயற்பெயர்: சின்னத்துரை சுந்தரலிங்கம்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 172, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ்).
168 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 20×14 சமீ.
‘சிவனொளி’ எனற பெயரில் ஆன்மீகச் சிற்றிதழ்களில் 12 இதழ்கள் 2009இல் வெளிவந்திருந்தன. அதன் ஆசிரியராக திருமலை சுந்தா பணியாற்றியிருந்தார். ஒவ்வொன்றும் 12 பக்கங்கள் கொண்டதாக வெளிவந்திருந்த இவ்விதழ் அந்நாளில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆசிரியர் திருமலை சுந்தாவின் ஆன்மீக ஆக்கங்களும், அவரது நண்பர்களின் ஆக்கங்களும், பல்வேறு இதழ்களிலிருந்தும் நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுத்த ஆன்மீகக் குறிப்புகளுமாக சிவனொளியின் பக்கங்களை அலங்கரித்து வந்தன. 2009இல் வெளியான ‘சிவனொளி” இதழ்களைத் தொகுத்து தனிநூலாக அம்மா வெளியீடாக வெளியிட்டுள்ளனர். இந்நூல் அம்மா பதிப்பகத்தின் 13ஆவது பிரசுரமாகும்.