மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் SW19 8JZ: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 288, Haydons Road, London, 1வது பதிப்பு, ஜுலை 1998. (இலண்டன்: வாசன் அச்சகம்).
63 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் முதலாவது சைவமாநாடு 1998 ஜுலை 11-12ஆம் திகதிகளில் இலண்டனில் இடம்பெற்றது. அதன்போது வெளியிடப்பட்ட இந்தச் சிறப்புமலரில் தலைவருரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவற்றுடன், மேற்குலகில் சைவ உதயம் (ந.சச்சிதானந்தன்), ஐரோப்பாவில் சைவ சமயத்திற்கு நெருக்கடியும் ஆலோசனைகளும் (க.செல்வரத்தினம்), சமயம் என்றால் என்ன? (பொன்னம்பல அடிகளார்), வழிபாடும் தமிழும் (சாந்தலிங்க இராமசுவாமி அடிகளார்), சிவனே அகிலத்தின் நாயகன் (இராம நாகநாதசிவக் குருக்கள்), சைவ சித்தாந்தம்-சில அடிப்படைகள் (க.கணேசலிங்கம்), Phenomenology and Saiva Siddhanta (K.Loganathan) ஆகிய இந்து சமயக் கட்டுரைகளும்; இடம்பெற்றுள்ளன. இம்மாநாடு, 11.07.1998 அன்று லண்டன் டுநறைளாயஅ வுாநயவசந இல் இடம்பெற்றது.