17142 சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதி பிள்ளையார் மஹா கும்பாபிஷேக மலர் 15-6-2002.

சுப்பிரமணியம் நீதிநேசன் (மலர் ஆசிரியர்). யாழ்ப்பாணம்: பரிபாலன சபை, பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதி பிள்ளையார் கோவில், சித்தன்கேணி, 1வது பதிப்பு, ஜுன் 2002. (யாழ்ப்பாணம்: கே.சண்முகநாதன், கலர் பிரின்ட்).

112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 23.5×17.5 சமீ.

இம்மலரில், அருளுரைகள், ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், ‘விநாயகர் மகிமை’ என்ற பிரிவில் பிரணவப் பொருளாகிய விநாயகப் பெருமானின் பரம்பொருள் தத்துவம் (ப.கோபாலகிருஷ்ணஐயர்), விநாயகர் (வை.இரகுநாத முதலியார்), பிள்ளையாரின் 32 திருவுருவங்கள் (கணபதி), வழிபாட்டில் தேங்காய் (-), பிள்ளையார் கையிலுள்ள ஆயுதங்கள் (கணபதி), விநாயகர்-பிரணவத்தின் வடிவம் ஆகிய ஆக்கங்களும், ஆலயம் பற்றிய நோக்கு என்ற பிரிவில், கோயில் வரலாறு (மு.பத்மநாதன்), சித்தர் காலம் தொடக்கம் இன்றுவரை அற்புதங்கள் புரியும் மஹா கணபதி, (க.அருணாசலம்), கணபதி, அருள்மிகு மகாகணபதிப்பிள்ளையார் திருவூஞ்சல், மஹா கணபதியின் மகத்துவம் (க.சிறிதரன்), கோயில் வரலாறு ஒரு கண்ணோட்டம் (சபாரத்தினம் திருச்சிற்றம்பலம்), விநாயகனின் மகிமை (சி.நவரத்தினம்), நாற்சந்தி நாயகன் பெருமை கேளீர் (சிவ அருள்மயம்), விக்கினங்கள் தீர்க்கும் எமது பெரியவளவான் (அண்ணாமலை மார்க்கண்டர்) ஆகிய ஆக்கங்களும், ‘சித்தூர் மக்களும் பெரியவளவானும்’ என்ற பிரிவில் பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப் பிள்ளையார் கோவில் பரிபாலன சபை அங்கத்தவர்கள், பக்தரைக் காத்திடும் ஐங்கரனே (கந்தசாமி ஸ்கந்தராசா), சித்தன்கேணி பெரியவளவு விநாயகனை வேண்டி வேண்டிய வரங்களைப் பெறுவோம் (வி.க.விஜயரட்டினம்). பெரியவளவு விநாயகனின் மகிமை (திருமதி குஞ்சு தங்கராசா), பெரியவளவுப் பிள்ளையாரின் மகிமையும் வரலாறும் (இராசையா சிவஞானமூர்த்தி), பிரணவஸ்வரூபம் (நிரஞ்சலா கமலநாதன்), அருள்புரிவாய் பெரியவளவானே- கவிதை (திருமதி ஜெ.அருள்மயம்), எம்பெருமானின் அற்புதங்கள் (தங்கராஜா தரணீதரன்), ஸ்ரீ மஹா கணபதயே நின் திருவடி சரணம் (திருமதி சிவகௌரி கணானந்தன்), நாற்சந்தி நாயகன் (ச.கார்த்திகேசு), சித்தன்கேணி பெரியவளவான் என்றும் துணைநிற்பான் (வல்லவாம்பிகை அம்மா), விக்கினங்களைத் தீர்க்கும் எமது பெரியவளவான் (திருமதி சர்வேஸ்வரி சதாசிவம்), சித்தன்கேணி கிராம அதிபதி (சு.நீதிநேசன்), விநாயகர் தந்த பிராட்டி தமிழுக்கு அரும்பணியாற்றிய ஒளவை – சித்திரக்கதை (-), உரைமழை பொழிவதில் உயர்நிலை பெற்றவர் சித்தன்கேணியூர் ஸ்ரீ அம்பலவாண நாவலர் (பண்டிதர் க.மயில்வாகம்) சஞ்சலம் வந்தால் வரட்டும் (சிவதொண்டன்), பிரதிஷ்டா பூஷணம் சிவஸ்ரீ வை.ஏ.குமாரசுவாமிக் குருக்களின் வாழ்க்கை வரலாறு ஆகிய ஆக்கங்களும்  இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்