17149 இன்பத் தமிழும் மேன்மைச் சைவமும்.

க.செல்வரத்னம். பிரித்தானியா: க.செல்வரத்னம், ஹம்ஷையார், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 91 பக்கம், ஒளிப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியப் பணியாற்றிவந்தவர். நாவலப்பிட்டியில் பணியாற்றிய காலத்தில் ஆத்மஜோதி முத்தையாவுடன் இணைந்து மலையகக் குழந்தைகளின் தமிழ் மற்றும் சமயக் கல்வி மேம்பாட்டுக்காக தொண்டாற்றியவர். யாழ். இந்துக் கல்லூரியில் பணியாற்றிய வேளையில் ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியதுடன் சிறுவர்களுக்கான சமூகக் கல்வி நூல்கள் சிலவற்றையும் எழுதியிருந்தார். இந்நூலில் சிவ வழிபாட்டுத் தத்துவங்கள், ஆலய வழிபாடு, ஆறுமுக நாவலர் (1822-1879), கோயில் திருமொழி, சைவ சமயத்தின் இன்ப அன்புநெறி, தாயுமானவர் பாடல்கள், திருக்குறளில் சிவநெறி, திருப்புகழ் ஞானம், திருமூலரின் திருமந்திரம், திருவைந்தெழுத்து, தொன்மையான சைவமும் தமிழும், நால்வர் சைவ நெறி வளர்ப்போம், புலம்பெயர் நாடுகளில் சைவத் தமிழர் படும்பாடு, பெரியபுராணம், மனவடக்கம், யோகர் சுவாமிகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்