சிவ.மகாலிங்கம். யாழ்ப்பாணம்: ‘சிவஜோதி’, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
xviii, 194 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14.5 சமீ.
கலாபூஷணம் சிவ.மகாலிங்கம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளராவார். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றியவர். யாழ்ப்பாணத்தின் குப்பிழான் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது முதலாவது நூலை (திருமுறைச் செல்வம்) 1999இல் வெளியிட்டவர். தொடர்ந்து வெளிவரும் ஒன்பதாவது நூல் இதுவாகும். இவர் எழுதிய ஒன்பது அருளியல் கட்டுரைகளும் ஐந்து அறிவியல் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ‘அருளியல்’ என்ற முதற் பகுதியில் திருமுறைகளில் வாழ்வியல், திருவாசகத்தில் சைவசித்தாந்தம், இந்து சமயத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் தாய்மைத் தத்துவமும், சைவ சமய வரலாற்றில் மகளிர் மாண்புகள்-பெரிய புராணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, திருப்புகழும் முருக வழிபாடும், தாயுமானவர் காட்டும் சைவநெறி, நல்லைக் கந்தனும் ஞானச் செல்வரும், மனிதனைப் புனிதனாக்கும் இந்து சமயம், ஈழத்துச் சித்தர் பாரம்பரியம் ஆகிய கட்டுரைகளும், ‘அறிவியல்’ என்ற இரண்டாவது பகுதியில் இந்துக்களின் பாரம்பரியக் கல்வியியல், ஈழத்தில் சைவக் கல்வி மரபு, மழலையர் கல்வியை மாண்புற வளர்ப்போம், நெறி தவறாத இளைஞர் சமுதாயமே நாட்டின் இதயம், அறிவுப்பசி தோன்றினால் அகக்கண் (ஞானக் கண்) திறந்துவிடும் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.