த.கலாமணி (மூலம்), க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
84 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-624-6601-61-4.
கலாநிதி த.கலாமணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக 30.01.2025 அன்று வெளியிடப்பட்ட இந்நூல், அமரர் கலாமணி எழுதிய சமயம் சார்ந்த கட்டுரைகளையும் பாடல்களையும் உள்ளடக்குகின்றது. விநாயகர் பரத்துவம், உதித்தனன் உலகமுய்ய, காத்தவராயர் வழிபாடு, மனதற்ற நிலை வேண்டிய தாயுமானவர் சுவாமிகள், அல்வாய் சாமணந்தரை ஆலடிப் பிள்ளையார் ஒரு வரலாற்றுச் சுருக்கம், அல்வாய் அருள்மிகு வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராய தேவஸ்தான திருத்தல வரலாறு, மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்: வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய விருத்தி பற்றிய ஒரு சமூகவியற் பார்வை, சர்வ வல்லமை கொண்ட காத்தான், எல்லாப் புகழும் பாலகணபதிக்கே, அல்வாய் சாமணந்தரை ஆலடிப் பிள்ளையார் மீது பாடிய அருட் கீர்த்தனைகள், அல்வாய் அருள்மிகு வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராய தேவஸ்தான மூர்த்திகள் மீதான துதிப் பாடல்கள், கொல்பிட்டி கருமாரி அம்மன் மீதான துதிப்பாடல், பரந்தன் நாகபூஷணி அம்மன் மீதான துதிப்பாடல், நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் மீதான துதிப்பாடல், கந்தா நின் அருள்வேண்டும் (துதிப்பாடல்), அல்வாய் அருள்மிகு வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் திருவூஞ்சல், கொற்றாவத்தை சிறப்பாவளை அவதாரக் கண்ணன் ஸ்ரீரமணன் திரு ஊஞ்சல், சோலை அம்மன் (வரலாற்றுக் குறிப்பும் துதிப்பாடலும்) ஆகிய ஆக்கங்கள் இங்கு தொகுக்கப்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 434ஆவது நூலாக வெளிவந்துள்ளது.