17157 தித்திக்கும் தேன் இன்னமுதம்: திருவாசகம்.

சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). லண்டன்:  திரு. சபாபதி மகேஸ்வரன், 1வது பதிப்பு, ஐப்பசி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

திருவாசகத்தின் நுனிப்பான கருத்துள்ள பாடல்களைத் தெரிவுசெய்து கையடக்க நூலாக தொகுப்பாசிரியர் வெளியிட்டுள்ளார். ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கமும் இந்நூலின் தொடக்கத்தில் காணப்படுகின்றது. இவர் ஏற்கெனவே பஞ்சபுராணத் தொகுப்பு (மாசி 2002), பன்னிரு திருமுறைத் தொகுப்பு (தை 2006, தை 2010), திருமுருகன் பாமாலை தொகுப்பு (கார்த்திகை 2012), பஞ்சபுராணத் திரட்டு (பங்குனி 2015), அம்பிகை அருட்பாமாலை (ஆவணி 2017) ஆகிய நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

10455 பாணியில் மிதந்த தோணி: சிறுவர் கதை.

உ.நிசார் (இயற்பெயர்: எச்.எல்.எம்.நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம். 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2015. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி). 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு:

8055 ஆண்-பெண் விழிப்புணர்வு.

அ.றொபேட். யாழ்ப்பாணம்: பணி.அ.றொபேட், 86, 3அம் குறுக்குத்தெரு, 2வது பதிப்பு, பெப்ரவரி 2012, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: அமெரிக்கன் இலங்கை மிஷன் அச்சகம், 464 ஆஸ்பத்திரி வீதி). viii, 56 பக்கம், விலை: