ஒளவை (இயற்பெயர்: சுவர்ணா கௌரிபாலா). லண்டன்: திருமதி சுவர்ணா கௌரிபாலா, 1வது பதிப்பு, 2023. (கொடிகாமம்: சிவகஜன் அச்சகம்).
x, 134 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-94840-0-9.
திருத்தொண்டர் சரிதத்தைக் கூறும் பெரிய புராணத்தை கவிதைவடிவில் படைத்து வழங்கியுள்ளார் ஒளவை (செல்வி சுவர்ணா சண்முகராஜா, திருமதி சுவர்ணா கௌரிபாலா) அவர்கள். தென்மராட்சியின் கிழக்கே கொடிகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ‘ஒளவை’. யாழ். பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பில் ஈடுபட்டு, கலைத்துறையில் கற்றுப் பட்டம் பெற்றவர். ஆசிரியர் சேவையில் இணைந்து யாழ்/மந்துவில் ஸ்ரீ பாரதி வித்தியாலயத்தில் சிறிது காலம் சமூக விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்து 2015 முதல் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து அங்கே குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார்.