ச.ஜயசீலன், பத்திருநாதன், பாலசுபபிரமணியம், யசோதா சின்னத்தம்பி. கொழும்பு 6: ச.சிவகுமார், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 1996. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
(6), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
லண்டன் Blackburn இல் இருந்து திரு.ச.ஜயசீலன், மன்செஸ்டரில் இருந்து திருமதி பத்திருநாதன், திருமதி பாலசுப்பிரமணியம், செல்வி யசோதா சின்னத்தம்பி ஆகியோரால் தொகுக்கப்பெற்றுள்ள இத்தோத்திரப் பாடல் திரட்டில் விநாயகர் பாடல், முருகன் திருப்பாடல்கள், அன்னை பராசக்தி, சிவதுதி, சிவபுராணம், திருமால், ஆரத்தி, Aarti ஆகிய எட்டு இயல்களில் சைவத் தமிழ்த் தோத்திரப் பாடல்கள் உள்ளடக்கப்பெற்றுள்ளன.