த.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: அமரர் மேனகா தனபாலசிங்கம் நினைவுமலர்க் குழு, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
(6), 54 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அவர்களின் அன்னையார் அமரர் மேனகா தனபாலசிங்கம் (31.08.1945-14.02.2022) அவர்களின்; சிவபதப்பேற்றின் முப்பத்தொராம் நாள் நிகழ்வின் போது வெளியிடப்பட்ட இந்நினைவு மலரில் நல்லூர் முருகன் பேரில் கவிஞர் தனபாலசிங்கம் ஜெயசீலன் பாடிய கவிதைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.