ச.வே.பஞ்சாட்சரம். கனடா: வெள்ளி அச்சுப் பதிப்பகம், மிஸிஸாக்கா, ஒன்ராறியோ மாகாணம், 1வது பதிப்பு, வைகாசி 2023. (Canada: Silver Print House and Publication, 4775, Yarmarok Crt, Mississauga, Ontario L5R 0A6).
xiii, 187 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×13.5 சமீ.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இறுதி யுத்தம் முடியும் வரையும் தொடர்ந்து அழிக்கப்பட்ட இந்துக் கோவில்களும் அவற்றின் உடைமைகளும் தமிழர்களால் மீளக் கட்டி உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அத்தலங்களின் மேல் அவ்வப்போது பாடப்பெற்ற தலபுராணங்கள், திருவூஞ்சல்கள் போன்ற பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் அழிந்தே போயின. இந்நிலையில் அவ்வாறு அழிவுற்றதாகக் கருதப்பட்ட முப்பத்தியொரு பக்தி இலக்கியங்களை மீட்டெடுத்து பண்டிதர் ச.வே.ப. அவர்கள் இந்நூலில் மீளப்பதிப்பித்திருக்கிறார். நுணாவிற்குளம் கண்ணகியம்மன் நான்மணிமாலை, மல்லாவி யோகபுரநாதர் திருப்பள்ளியெழுச்சி, தெல்லியம்பதித் துர்க்கை அம்மன் திருவிரட்டை மணிமாலை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் முருகன் மும்மணிக் கோவை, மருதனார்மடம் இணுவில் பல்லப்ப ஞானவைரவர் திருப்பள்ளியெழுச்சி, கிளிநொச்சி வன்னேரிக்குளம் ஐயனார் அருள்மங்கலம், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் காட்டம்மன் சிந்து, இணுவில் பரராசசேகர விநாயகர் வெண்பா, முல்லை-மல்லாவி யோகபுரநாதர் சேவடிச் சிந்து, மேலை இணுவில் விளாத்தியடி ஞானவைரவர் திருவிரட்டை மணிமாலை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் முருகன் திருப்பள்ளியெழுச்சி, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணனுக்குக் கிள்ளை விடு தூது, கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் நான்மணி மாலை, கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதர் திருவிரட்டை மணிமாலை, சுன்னை ஐயனார் அம்புலித்தூது, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் சித்தி விநாயகர் திருவூஞ்சல், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணகிபுரம் நாகதம்பிரான் சுவாமி திருவூஞ்சல், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணபிரான் திருவூஞ்சல், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் காட்டம்மன் முத்துமாரி அம்மன் திருவூஞ்சல், பூநகரி முழங்காவில் விநாயகபுரம் ஸ்ரீமுருகன் திருவூஞ்சல், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இத்தியடி நடன முத்துமாரி அம்மன் திருவூஞ்சல், கிளிநொச்சி வன்னேரிக்குளம் ஐயனார் திருவூஞ்சல், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இரண்டாம் பாடசாலை மகிழ் துர்க்கை அம்மன் திருவூஞ்சல், ஸ்ரீராஜராஜேஸ்வரி மனோன்மணி அம்பாள் திருவூஞ்சல், கண்ணன் கவசம், கிளிநொச்சி ஆனந்தபுரம் ஜெயதுர்க்கை அம்மன் அருட்சிந்து, கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கியபுரம் எட்டாம் கட்டை சித்தி விநாயகர் திருவடி புகற்பா, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கொன்றையடி ஞானவைரவர் பதிகம், கைதடி நுணாவில் சிவபூதராயர் போற்றிப் பதிகம், மன்னார் பாலம்பிட்டி முத்துமாரி மும்மணிக்கோவை, சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சரர் திருப்பள்ளி எழுச்சி ஆகிய தலைப்புகளில் இப்பக்தி இலக்கியங்கள் பாடப்பெற்றுள்ளன.