அ.வரதபண்டிதர் (மூல ஆசிரியர்), வ.மு.இரத்தினேசுவர ஐயர் (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: சண்முகநாதன் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் வரத பண்டிதர் அவர்கள், கந்தபுராணம், இலிங்க புராணம், உபதேச காண்டம் முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகர் மகிமைகளையும் அருட்செயல்களையும் திரட்டிப் பிள்ளையார் கதை என்னும் நூலாக்கியுள்ளார். இது பிள்ளையார் கதை, போற்றித் திருவகவல், வருக்கக் கோவை, தத்துவஞானத் திருவகவல் ஆகிய நான்கு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது.