17167 அதிசய நீரூற்று ஸம்ஸம்.

அகத்திமுறிப்பான். (இயற்பெயர்: செய்னுதீன் செய்கு பரீத்). பரகஹதெனிய: ஜம் இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா. தலைமையகம், பறகஹதெனிய, Ntcl, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

vii, 40 பக்கம், ஒளிப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-8732-49-6.

‘ஸம் ஸம் கிணறு’ (ZamZam well) அல்லது ‘ஸம் ஸம் ஊற்று’ என்பது மக்காவில் உள்ள ஹராம் பள்ளிவாசலில் உள்ள கிணற்றைக் குறிக்கும். இது காஃபாவின் கிழக்கே 20 மீற்றர் தூரத்தில் உள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின்படி இப்ராகிம் நபியின் புதல்வர் இஸ்மாயில் நபி தாகத்தினால் அழும்போது உருவானது. ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் மற்றும் உம்ராவின் போது முஸ்லிம்கள் இக்கிணற்றிலிருந்து வெளிவரும் தண்ணீரை புனித நீராக அருந்துகின்றனர். இந்நூல் இந்தப் புனித கிணறு தொடர்பான இஸ்லாமியரின் நம்பிக்கை பற்றிப் பேசுகின்றது. ‘ஸம்ஸம்’ ஓர் அறிமுகம், ‘ஸம்ஸம்” நீரூற்றின் தோற்றம், தூர்ந்த ‘ஸம்ஸம்’, ‘ஸம்ஸம்’ மீள் புனரமைப்பில் அப்துல் முத்தலிப், ‘ஸம்ஸம்’ நீரூற்றினது தொன்மை, ‘ஸம்ஸம்’  கிணற்றின் கட்டமைப்பு, ‘ஸம்ஸம்’ கிணற்றின் இன்றைய நிலை, ‘ஸம்ஸம்’ நீரின் மகிமைகள், ‘ஸம்ஸம்’ நீரினால் நபியவர்களது இதயம் கழுவப்பட்டமை, ‘ஸம்ஸம்’ நீர் அருந்த நபியவர்கள் காட்டிய ஆர்வம், ‘ஸம்ஸம்” நீரின் மீதான ஆர்வம், ‘ஸம்ஸம்’ ஒரு நோய் நிவாரணி, ‘ஸம்ஸம்’ நீரை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லல், ‘ஸம்ஸம்’ நீருடன் தொடர்புள்ள சில ஐயங்கள் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 89407).

ஏனைய பதிவுகள்