முஹம்மத் ஹுஸைன் பெஹெஷ்தி (பார்சி மூலம்), அஸாம் மஜீதி (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, anjumanehikmat @gmail.com, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 10: UDH Compuprint).
58 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-95441-4-7.
புனித குர் ஆனின் உள்ளடக்கத்தை விளங்கிக்கொள்ளும் ஆர்வம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. குர்ஆன் அருளப்பட்ட காலத்துக்கே உரிய பிரயோகங்களையும் மொழி வழக்குகளையும் கொண்டிருப்பது மற்றும் முக்காலத்துக்கும் அவசியமான வழிகாட்டல்களை உள்ளடக்கியிருப்பது போன்ற பல காரணங்கள் அதனை சரிவர விளங்கிக் கொள்வதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. முஹம்மத் ஹுஸைன் பெஹெஷ்தி ஈரானின் இஸ்லாமியப் புரட்சியில் முன்னணியில் இருந்து செயற்பட்ட பிரபல அறிஞரும் சிந்தனையாளருமாவார். 1978ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹித் பெஹெஷ்தி அவர்களிடம் வினவப்பட்ட விடயங்களையும் அவற்றுக்கு அவர் வழங்கிய விளக்கங்களையும் தொகுத்து ‘குர் ஆனை விளங்கும் முறை’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட மூலநூல், பாரசீக மொழியில் வெளிவந்திருந்தது. அம்மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் திருக்குர் ஆனின் சிறப்பம்சம், குர்-ஆனிய சமிக்ஞை, ஒப்பீட்டு முறைக்கான அனுமதி, புனிதமற்ற வழிகாட்டி, குர்ஆனும் பிரபஞ்சமும் ஆகிய தலைப்புகளில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71594).