அஷ் ஷெய்க் ஆஸாத் ஸிராஸ், அஷ் ஷெய்க் அஷ்கர் அரூஸ். கொழும்பு 9: ரீட் மோர் (Read more) பப்ளிக்கேஷன், 82, ஸ்ரீ வஜிரானந்த மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (கொழும்பு: Alpha Printers).
xiii, 107 பக்கம், விலை: ரூபா 575., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5718-43-6.
‘முன்னுரை’, ‘பௌத்தம்-இஸ்லாம்’ (ஆய்வு முறையியல், வரலாற்றில் பௌத்த கற்கைகள் தொடர்பில் முஸ்லிம்களின் ஆர்வம், பௌத்த-இஸ்லாம் ஒப்பீடு: சில அடிப்படைகள்), ‘சமூக நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும்-அறிமுகம்’ (சமூக நல்லிணக்கம், சமூக நல்லிணக்கத்தின் அவசியப்பாடு), ‘சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும்: பௌத்த கண்ணோட்டம்’ (ஆய்வறிமுகம், புத்தரும் மனிதநேயமும்-ஒரு பொதுப் பார்வை, சமூக நல்லிணக்கம் பௌத்த பிரஹ்ம விஹாராவின் ஒளியில்), ‘சமூக நல்லிணக்கமும் மனித நேயமும்: இஸ்லாமியக் கண்ணோட்டம்’ (ஆய்வறிமுகம், நபி (ஸல்) பல்லின சமூகங்களுக்கிடையில் கடைப்பிடித்த நட்புறவுக்கான சில முன்மாதிரிகள், பல்லின சமூகங்களுடன் கலந்த வாழுதல் கரைந்து போகாதிருத்தல்), ‘முடிவுரை’ ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் விரிவானதொரு சமூக நல்லிணக்கத்திற்கான பௌத்த-இஸ்லாமிய ஒப்பீட்டினை முன்வைத்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71436).
மேலும் பார்க்க:
அஷ்ஷஹுத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் வாழ்வும் பணியும்;. 17882
ஈஸ்டர் படுகொலை: 17217
கலாநிதி. எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகள். 17083
திருக்குர் ஆன் இயற்கை மருத்துவம். 17388