கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 632 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-4676-92-3.
2012 (ஜுன்-ஓகஸ்ட்) இல் இருந்து ‘கடல்’ சஞ்சிகை வெளிவருகின்றது. கல்வியியல், உளவியல், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளைத் தாங்கி கல்வியில் நாட்டம் கொண்ட மாணவர்களது அறிவுப்பசிக்கு ஏற்ற தீனியாக ‘கடல்’ அறிவியல் சஞ்சிகை, அல்வாய் ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகையின் முதல் 18 இதழ்களின் தொகுப்பாக வெளிவரும் இந்நூலில் தகைசார் கல்வியாளர்களால் எழுதப்பட்ட 140 கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை கல்விக் கழக விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், உளவளத் துணையாளர்கள், உளவள நாடுநர்கள், சிறுவர் இல்லப் பொறுப்பாளர்கள் போன்றவர்களுக்குரிய கைந்நூலாகக் கொள்ளத்தக்கது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 118ஆவது நூலாக வெளிவந்துள்ளது.