குணநாயகம் விக்னேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xv, 140 பக்கம், விலை: ரூபா 1450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-53-9.
இந்நூலானது சமூக மானிடவியல் கற்கைப் புலத்தில் பிரதானமாகக் காணப்படும் கோட்பாடுகள், எண்ணக்கருக்கள் என்பன பற்றிய அறிமுகத்தினை உள்ளடக்கியுள்ளது. மானிடவியல் கற்கைப்புலம் தொடர்பான அறிமுகத்தினையும் அக்கற்கையின் தன்மை, வியாபகம் பிரிவுகள் தொடர்பான விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. சமூக மானிடவியல் புலத்தின் முதன்மையான கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களும் தெளிவுபடுத்தல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மானிடவியல் கற்கைக்கான அறிமுகம், சமூக ஒழுங்கு, சமூக நிறுவனங்கள், கலாசாரம் சமயம்-புனைவுகள்-சடங்குகள், உறவுமுறை, ஒருவழிப் பரிணாமவாதம், கலாசார சார்புடைமைவாதம், செயற்பாட்டு வாதம், கட்டமைப்புவாதம், பரவல்வாதம், உளவியல்சார் மானிடவியல், குறியீட்டு மானிடவியல், அபிவிருத்தி மானிடவியல் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71500).