17175 உறங்கும் உண்மைகள் (பாகம் 2).

குடும்பம், அரசு, சட்டம், மகிழ்ச்சி- கட்டுரைத் தொகுப்பு. எஸ்.ரி.நாதன் (இயற்பெயர்: செல்லத்துரை தவநாதன்). கனடா: செல்லத்துரை தவநாதன், Serving Tamils Organisation (STO), ஒன்ராரியோ, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கனடா: செல்வா கிராப்பிக்ஸ், ஒன்ராரியோ).

(10), 243 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9936539-1-9.

குடும்ப ஏற்பாடுகள், தமிழ் தமிங்கிலம் ஆகத் திரிபடைந்தால், மனித வளங்கள், மனித நேயம், குடும்பச் சிக்கல்கள், அரசியல் ஏற்பாடுகள், அரசியல் ஆதாயங்கள், உற்பத்தி ஏற்பாடுகள், சட்டம் இருட்டறையா? வெளிச்சவீடா?, எழுதப்படாத மதச் சட்டங்கள், எழுதப்படும் அரசியல் சட்டங்கள். சட்டக் குழப்பங்கள், நீதி பாதி- மீதி அரசியலா?, தமிழக முதல்வர் ஜெ, சட்டங்கள் வாழ்வுக்கான நல்ல திட்டங்கள் ஆக அமைவது அவசியம், மனசுக்கு மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படைத் தேவை, மானிடச் சுழற்சியின் மையம், மகிழ்ச்சி இருக்கும் இடம், மூன்றுக்குள் மூன்றாய் மூன்றுகள், கனடாவில் வெளிவரும் பிரபல தமிழ்ப் பத்திரிகை உதயனில் வெளிவந்த எஸ்.ரி.நாதன் சிந்திய சிந்தனைகள் ஆகிய 20 ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்